Pages

Tuesday, 21 May 2013

சாபத்தை கொண்டு வருபவை பாகம் ஒன்று

அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளானது. - (உபாகமம் 7:26). 

நம் வீடுகளில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கொண்டு செல்லும் சில பொருட்கள் தேவனுடைய சாபத்திற்கு உள்ளானதும், சாத்தான் அதிலே பிரியப்படுகிறதுமாயிருக்கிறவைகளாயிருக்கக்கூடும். ஆனால் அவற்றை நாம் அறியாமல் நம் வீட்டிற்கு கொண்டு செல்லும்போது, சாத்தானையும், சாபத்தையும் நம்மை அறியாமல் நம் வீட்டிற்கு எடுத்துச் செல்லுகிறோம்.

ஒரு வீட்டில் சமாதானமே இல்லாமல், எப்போதும் சண்டையும் சச்சரவுமே நிறைந்திருந்தால் அந்த வீட்டில் சத்துருவின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது என்று பொருள். எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் ஒரு நாள் கணவன் மனைவி சந்தோஷமாக இருந்தால், அடுத்த 20 நாட்களுக்கு சண்டையும் சச்சரவும் தான். எத்தனைதான் ஜெபித்தாலும் அந்த வீட்டில் நடக்கும் சண்டைகளையோ போராட்டங்களையோ மாற்ற முடியாமல் தவிப்பதை காண முடிகிறது. கெட்ட கனவுகள், திடீரென்று வீட்டில் அசுத்தமான துர்நாற்றம் வீசுவது, குழந்தைகள் காரணமே இல்லாமல் வீறிட்டு அழுவது போன்றவைகள் நடந்தால் அசுத்த ஆவிகளின் நடமாட்டம் இருக்க வாய்ப்புகள் உண்டு.

அசுத்த ஆவிகள் சில வேளைகளில் நாம் வாங்கும் பொருட்களை பற்றிக் கொண்டு வீட்டிற்குள் வந்து விடலாம். அப்படிப்பட்ட சில பொருட்களைக் குறித்து நாம் காணலாம்கண்கள் காணுவதைப் போல படம் உள்ள உடைகளை அணிதல்மரித்தவர்களின் உருவப்படங்கள்,சீனாவின் சில பலகை விளையாட்டுகள்உருவ சிலைகள், இயேசுகிறிஸ்துவின் உருவ படங்கள் (கிறிஸ்து வாழ்ந்தகாலத்தில் உள்ளவர்கள் யாரும் தற்போது இல்லை. ஆகவே அவர் எப்படியிருந்தார் என்று யாருக்கும் தெரியாது).


சில டெலிவிஷன் சீரியல்கள் (பிசாசு பிடித்த கதைகள், டிராக்குலா, super natural serials, Twlight Saga... போன்றவை) வேதத்தின் அடிப்படையில் இல்லாத மத சம்பந்தமான புத்தகங்கள், கர்த்தருக்குள் இல்லாத புறமதத்தை  சார்ந்த மற்றும் மத சார்பு இல்லாத சிலர் வீட்டிற்குள் வரும்போது, யோகாஹிப்னாடிசம், Inner Healing சில தேவதைகளின் உருவ சிலைகள், படங்கள்சிவப்பிந்தியர்கள் வரைந்த ஓவியங்கள், சிலைகள், உடைகள் எகிப்தியரின் சில சிலைகள், உருவப்படங்கள் போன்றவை நம் வீட்டில் இருக்கும்போதுஅல்லது நாம் செய்யும்போது, சாத்தானின் உலகத்தை அழைக்கிறோம்அப்படிப்பட்ட எதுவும் நம் வீடுகளில் இருக்கக்கூடாது. செய்யவும் கூடாதுசிலர் 'ஹோ இது என்னோடு வேலை செய்யும் சகோதரன் அல்லது சகோதரி கொடுத்தது, அதில் எப்படி சாத்தானின் கிரியை இருக்;கும்' என்று நினைக்கலாம், ஆனால் சில காரியங்கள் நம் வீட்டிற்கு சாபத்தை கொண்டு வரும் என்பதை மறக்கக்கூடாது.

எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில், அவர்கள் மத்திய கிழக்கு பகுதியில் வேலை செய்தபடியால், அவர்களோடு வேலை செய்த மற்றவர்கள் எகிப்திலிருந்து சில உருவ சிலைகளையும், படங்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை அவர்கள் தன் வீட்டில் வைத்திருந்தார்கள். அது அவர்கள் வீட்டிற்கு சாபத்தை கொண்டு வந்தது.


சிலர் அசுத்த ஆவிகளோடு ஒரு டம்ளரை தலைகீழாக வைத்து மெழுகுவர்த்தியை கொளுத்தி, பேசுவார்கள். அப்போது அவை பதில் கொடுக்கும். ஆனால் அவை யாவும் பொய்யே. 'அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலி ல்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்' (யோவான் 8:44)

என்று வேதம் கூறுகிறது. சில வாலிபர்களுக்கு இப்படி செய்து அசுத்த ஆவிகளோடு பேசுவதில் சந்தோஷம். நாம் அப்படி ஒருபோதும் செய்யக்கூடாது. ஏனெனில் அது பின் தனக்கு அந்த வாலிபனை அடிமையாக்கிக் கொள்ளும். அப்படி எனக்கு தெரிந்த வாலிபர்கள் பலர் இருக்கின்றனர்.

'சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம்  எச்சரிக்கை யாயிருங்கள்' (யோசுவா 6:18) என்று வேதம் நம்மை  எச்சரிக்கிறது. ஆகவே நாம் சாபமான எது ஒன்றிலும் பங்கு இல்லாதபடி நம்மை பாதுகாத்து, நம்மை கிறிஸ்துவுக்குள்ளாய் காத்துக் கொள்ள  வேண்டும். நம் வீடு எப்போதும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாக  இருக்கவேண்டும். ஒருபோதும் பிசாசின் வீடாக இருக்கவே கூடாது.


பிசாசானவன் நம்மை எப்போதும் வஞ்சிக்கிறவனாய் இருக்கிறபடியினால், நாம் அவனுடைய தந்திரங்களுக்கும், அவன் நம்மை அடிமைப்படுத்தும் எந்த காரியத்திற்கும் அடிமைகளாகாதபடி காத்துக் கொண்டு, கர்த்தருடைய

இரத்தக் கோட்டைக்குள் நம்மை ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டுநம்மையும் நம் குடும்பத்தையும் கிறிஸ்துவின் பாதுகாப்பின் கோட்டைக்குள்
வைத்துவிடுவோமாக. ஆமென் அல்லேலூயா
.

இரத்தக்கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன்

இனி எதுவும் அணுகாது, எந்த தீங்கும் தீண்டாது
நேசரின் இரத்தம் என்மேலே, நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியாகி, சாபத்தை வென்று விட்டார்

No comments:

Post a Comment