உன் பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். - (எபேசியர் 4:29).
.
கர்த்தருடைய ஊழியர் ஒருவர் பிரசித்தி பெற்ற டாக்டர் ஒருவரோடு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர் நரம்பு சம்பந்தமான சிகிச்சையில் மிகவும் பெயர் பெற்றவர். அவர் தேவ மனிதனிடம் சொன்னார், 'சரீரத்திலுள்ள எல்லா நரம்புகளைக் காட்டிலும் பேச்சுக்கான நரம்புகளே நம் சரீரத்தை ஆளுகிறவைகளாக இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? தேவ ஊழியர்களாகிய நீங்கள் வேத வசனத்தை இடைவிடாமல் பேசுகிறதாலேயே வல்லமையுள்ளவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம்' என்றார்.