கர்த்தருக்குப் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். ”என் பின்னே வாருங்கள்” எனும் கர்த்தருடைய இதயத்துடிப்போடு, இப் புதிய 2014 ஆண்டிற்குள் கடந்து செல்வோமாக.
யோவான் 1:29-34ல், யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்றும், அவர் உலகத்தின் பாவங்களை தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டியானவர் என்றும், அவரே இதுவரை உலகம் காத்திருந்த மேசியா என்றும் முழுமனதுடனே விசுவாசித்தார். நாமும் யோவானைப்போல் இயேசுவை அறிந்திருந்தால், அவரை பின்பற்றுவோம் அல்லவா?
யோவான் 1:35-36ல் இயேசு இரண்டாவது தடவையாக யோவான்ஸநானன் இருந்த இடத்திற்கு வருகிறார். அப்பொழுது யோவான்ஸ்நானன் தன்னை பின்பற்றி வந்த சீஷர்களைப் பார்த்து, இயேசு கிறிஸ்து யார் என்று உங்களுக்கு தெளிவுபடுத்தியும், ஏன் இன்னும் அவரைப் பின்பற்றாமல் இருக்கின்றீர்கள் என்று கேட்கிறான். அப்பொழுது தான் யோவானும், அந்திரேயாவும் இயேசுவின் பின்னே போகின்றார்கள். இயேசு இவ்விருபேரும் தம்மை பின்தொடர்வதைக் கண்டு, என்ன தேடுகின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள், ”நீர் தங்குமிடத்தை பார்க்கும்படி வருகின்றோம் ” என்றார்கள். அவ்விரு சீஷர்களும் அன்று அவருடனேயே தங்கியிருந்தனர்.
மறுநாளில் அந்திரேயா. தனது சகோதரனாகிய சீமோனிடத்திற்குச் சென்று, ”நான் மேசியாவைக் கண்டேன்” என்றான். அவனை இயேசுவினிடத்திற்கு அழைத்து வருகின்றான். இயேசு சீமோனோடு பேசி, இனி நீ சீமோன் என்னப்படாமல் பேதுரு என்னப்படுவாய் என்று பெயரை மாற்றுகிறார். அந்த சந்திப்பின் போது பேதுரு, இயேசு, மெய்யாகவே தேவனுடைய குமாரன் என்று அறிந்து, விசுவாசித்து, அறிக்கையும் பண்ணுகிறான். ஆனால் அந்த அனுபவத்தை சீக்கிறமாய் மறந்து போனவனாய் தன்னுடைய பழைய தொழிலை செய்ய போய்விட்டான். இயேசு, திரும்பவும் அவர்களைத் தேடி கலிலேயா கடற்கறைக்குப் போகின்றார். அங்கே திரும்பவும் அவர்களை சந்தித்து ”என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்னறார்”. இன்று எமது வாழ்க்கையில் காணப்படவேண்டிய முதன்மையான 3 காரியங்களை உங்கள் முன் வைக்கிறேன்.
1.அவருக்கு பின்செல்.
இன்று நாமும் கூட இந்த சீஷர்களைப் போலவே காணப்படுகின்றோம் அல்லவா? கர்த்தருடைய தொடுகையை, அற்புதங்களை, தரிசனங்களை, விஷேட சந்திப்புக்களை அடைந்தும், பலரிடத்திலே இயேசுவை குறித்து சாட்சிகூறி, பலரை கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்திய பின்னும், ஒரு சில காலத்திற்குள் எல்லாவற்றையும் மறந்து, எம்முடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுகின்றோம். இயேசு அவர்களை கலிலேயாவுக்கு பின்தொடருகின்றார். என்னுடைய அழைப்பை மறந்து வாழ்ந்தது போதும், இன்று நீங்கள் என்னை பின்பற்ற தீர்மாணிக்க வேண்டும். உன்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் இன்று உருவாக வேண்டும் என்று அவர்களுக்குச் சொன்னார்.
இன்று கர்த்தராகிய இயேசு நமக்கும் இந்த 2014ம் ஆண்டில் இதையே கூறுகின்றார் என்பதை விசுவாசிக்கின்றேன். இயேசுவை முழுமனதுடனும், அர்பணிப்புடனும் பின்பற்ற இதுவே காலம். ”கர்த்தாவே, இதோ என்னைத் தருகிறேன் உம் கரத்தில், உமது சித்தம் போல் என்னை எடுத்து பயன்படுத்தும்” என்று ஜெபிக்களாமா? இல்லை கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் வைத்திருக்கிற நோக்கம் நிறைவேற எப்பொழுது அவருக்கு உங்களை அர்பணிக்கப் போகின்றீர்கள்? உங்களில் சிலரை கர்த்தர் ஒரு வீட்டுக்கூட்டத்தை வழிநடத்த, அல்லது கிரமங்களுக்குச் சென்று சுவிஷேசத்தை அறிவிக்க, அல்லது சிறுவர் மத்தியில் ஊழியம் செய்ய, அல்லது வாலிபர் மத்தியில் ஊழியம் செய்ய அழைக்கின்றார்.
2.புதிய ஆத்துமாக்களை கண்டுபிடியுங்கள்.
யோவான் 1:40-41 அந்திரேயா முதலாவதாக தன்னுடைய சகோதரனான பேதுருவை இயேசுவினிடத்திற்கும், பிலிப்பு, நிக்கோதேமுவையும் இயேசுவினிடத்திற்கு கொண்டு வந்தார்கள். ஒருவன் இயேசுவை பின்பற்றும் போது, அவன் தானாகவே மனுஷர்களை இயேசுவினிடத்திற்கு வழிநடத்துபவனாகவே காணப்படுவான். நாம் ஆத்துமாக்களை இயேசுவினிடத்திற்கு வழிநடத்தவில்லையெனில், இயேசுவைப் பின்பற்றவில்லை என்பதாகும். இயேசு சொன்னார், ஒருவன் என்னைப் பின்பற்றினால், அவனை மனுஷரைப் பிடிக்கிறவனாக நான் மாற்றுவேன். இன்று அனேகர் கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றாததாலே, எவ்வளவு தான் பிரயாசப்பட்டும் ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்த முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் தங்கள் சபையில் விசுவாசிகளின் எண்ணிக்கையை பெரிதாக்கிக்கொள்ள, ஏற்கெனவே இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் சம்பாதித்த ஆத்துமாக்களை திருடுகின்றார்கள்.
3. அவர் நம்மை கண்டு பிடித்தார்.
அந்திரேயா, சிமியோனை கண்டுபிடித்தார், பிலிப்பு, நாத்தான்வேலைக் கண்டுபிடித்தார், யார் பிலிப்புவைக் கண்டுபிடித்தது? உண்மையாகவே, இயேசு தான் அவனையும் நம் எல்லோரையும் கண்டுபிடித்தது. இயேசு தான் சீஷர்கள் இருந்த இடத்திற்குச் சொன்றார். இயேசு தான் அந்திரேயாவையும், பேதுருவையும் திரும்பவும் தேடி கண்டுபிடித்தது. நானோ அல்லது நீங்களோ தேவனை தேடி போகவில்லை. இயேசு தான் எங்களைத் தேடி வந்தார். யோவான் 15:19ல்,நாங்கள் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை, அவரே நம்மை தெரிந்துகொண்டார். ரோமர் 3:11ல் நாம் தேவனைத் தேடாதவர்களாயுமாய் இருந்தோம். ஆதாமும் ஏவாழும் பாவம் செய்த போது, வெட்கம் அவர்களை தேவனைவிட்டு ஒழியச்செய்தது. யோவான் 15ல் காணமல்போன ஆடு, வெளிக்காசு, கெட்ட குமாரன் எல்லாம் தேவனால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது போல. பிதா இயேசு கிறிஸ்துவை எப்படி நேசிக்கிறாரோ, அதே பிரகாரம் அவர் உங்களையும் நேசிக்கிறார்.
பிரியமானவர்களே! இந்த 2014ம் வருடம்,….
முதலாவது இயேசுவைப் பின்பற்றுவோம்
முதலாவது புதிய ஆத்துமாக்களை சந்திப்போம்
முதலாவது தேவனால் நாம் கண்டுபிடிக்கப்பட்டோம் என்பதை மனதில் வைத்து, தேவன் நம் வாழ்வில் வைத்திருக்கும் திட்டத்தை நிறைவேற்ற முன்னேறுவோம்.
No comments:
Post a Comment