Tuesday, 19 February 2013
பழமொழியும் - வேதமும்
1 . அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். (நீதி 15:13)
2 . அடி நாக்கில் நஞ்சு, நுனி நாக்கில் அமுதம்.
பரஸ்திரியின் உதடுகள் தேன் கூடுபோல் ஒழுகும், அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போல கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாய் இருக்கும். (நீதி 5:3,4; யாக்:3 :8 ,9)
3 . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
தேனைக் கண்டாயானால் மட்டாய்ச் சாப்பிடு மிதமிஞ்சி சாப்பிட்டாயானால் வாந்தி பண்ணுவாய். (நீதி:25:16).
4. அடக்கமே பெண்ணுக்கு அலங்காரம்
அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது, அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது. (1 பேதுரு 3:3).
5 .அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்
அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். (1 கொரி:13 :7).
6 .அன்பான நண்பனை ஆபத்தில் அறி
சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கண்ணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். (நீதி17:17, யோபு 12:4, எரே 9:4)
7 .ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். (நீதி 22:6 )
8 .அறிய அறிய கெடுவார் உண்டோ?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கணியற்றவர்களுமாயிருக்க வொட்டாது. (2 பேதுரு1:8, 2 பேதுரு 1:3, யோவா 17:3).
9. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேரு.
அந்நாட்களிலே இஸ்ரவேலில் இராஜா இல்லை ,அவனவன் தன் தன் பார்வைக்கு சரிபோனபடி செய்து வந்தான். (நியா:21:25)
10 அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
அதிபதியானவன் பொய்களுக்குச் செவி கொடுத்தால் அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள். (நீதி 29:12).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment