Pages

Wednesday, 26 December 2012

Heal the Sick விசுவாசிகளே! வியாதியை சுகமாக்குங்கள்!



மாற்கு :16 :18 
விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவனவியாதியிஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள்அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.

இன்றைய சபைகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே காணப்படுகிறதுகாரணம் மற்றவர்களை குணமாக்க வேண்டிய விசுவாசிகளே இன்றைக்கு சுகவீனர்களாகவும்தங்களை சுகமாக்க இன்னொருவரைத் தேடுகிறவர்களாக காணப்படுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம்?  ஊழியராகிய நாம் விசுவாசிகளுக்கு ஆவிக்குரிய காரியங்களை பிரசங்கித்து அவர்களுக்கு ஆன்மீக வளர்ச்சியை உண்டாக்குவதற்கு பதிலாக, சரீர வளர்ச்சியை உண்டாக்கும் செழிப்பான உபதேசங்களை பேசி உலகத்தில் ஆசிர்வாதமாகவும்ஆவிக்குரிய ஆசிர்வாதங்களில் அவர்களைத் தரித்திரராகவும் மாற்றி விட்டோம்ஆகவே இன்றைய நிலையில் சபையானது எப்படியிருக்கிறது என்றால் தரிசனமில்லா குருடர்கள்சுவிசேஷம் சொல்ல ஊமையர்கள்ஊழியம் செய்யாத முடவர்கள்கொடுக்காத குஷ்டரோகிகள்வேதம் கேட்காத செவிடர்கள்இபாடி ஒரு பெதேஸ்தா குளம் போலவும்இன்னொரு விதத்தில் பார்த்தால் சபைக்குள்ளே நோய்களும்வியாதிகளும் பெருகி வருகிறபடியால் சபை ஓர் அரசாங்க மருத்துவமனை போலவும் காட்சியளிக்கிறதுஎனவே தான் சபைக்குள்ளே சுகமளிக்கும் கூட்டங்களும் வியாதியை சொல்லி அழைக்கிற தீர்க்கதரிசிகளையும் அழைத்து பிரசங்கிக்கச் சொல்லுகிறோம்இது எவ்வளவு பரிதாபமான நிலை என நாம் உணர வேண்டும்.


நாமே உலகத்தாருடைய வியாதிகளைச் சுகமாக்கும் மருத்துவர்களாய் இருக்கிறோம் என்பதை சபை மறந்து போனதுஇயேசு  கிறிஸ்து தாம் வாழ்ந்த காலத்தில் ஓர் நடமாடும் மருத்துவமனையாகவே செயல்ப்பட்டார்அவரைத் தொட்டவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்நோய்களையும், வியாதிகளையும், அவர் சுகமாக்கினார்மத்4:23,24,9:35, அப்படியே லூக்கா 9:1-2ல் சகல வியாதிகளையும் சுகமாக்கும் வல்லமையையும் அதிகாரத்தையும் தமது சீஷர்களுக்கு கொடுத்தார்தொடர்ந்து அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சீஷர்களுக்கு கொடுத்தார்அப் 5:15,16  சுவிசேஷகர்களும் அப்:8:6,7  பந்தி விசாரிப்பு செய்த சாதாரண விசுவாசி என அழைக்கப்பட்ட ஸ்தேவானும் அப் 6:8,10 சபை மூப்பர்களும்  யாக் 5:14 வியாதிகளை சுகமாக்கி அற்புத அடையாளங்களை செய்தார்கள் என வேதம் போதிக்கிறதுதேவன் அவர்களோடே கூட இருந்து கிரியை நடப்பிக்கமாட்டாராபடைப்பிக்க முடியும்ஆனால் நம்முடைய விசுவாசத்தை நாம் விசுவாசிக்க முடியாமல் மற்றவர்களின் விசுவாசத்தையே நம்புகிறோம்சுகமாக்க வேண்டுமானால் சுகமளிக்கும் வரம் வேண்டும்அது எனக்கு இல்லை என விசுவாசிகள் நினைக்கக் கூடாது .

வரங்கள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவருக்குள் இருக்கிறதுஅந்த பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார்அப்படியானால் வரங்கள் இப்பொழுது நமக்குள் வந்து விட்டதுபின்பு ஏன் நாம் மற்றவர்களைச் சுகமாக்கக் கூடாதுகூடும்நம்மால் கூடாதது ஒன்றுமில்லைஇங்கே வரங்கள் செயல்படும் வழிதான் விசுவாசம்சபையார் விசுவாசத்திலே உறுதியாக நின்று ஜெபித்தாலே, விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.

முதலாவது நம்முடைய வியாதிக்கு மேல் அதிகாரத்தை செலுத்தி நம்முடைய சரீர பெலவீனங்களை மேற்கொள்ள பழகுங்கள்எல்லா நோய்களும்வியாதிகளும் உங்கள் விசுவாச ஜெப வல்லமைக்கும்அதிகாரத்திற்கும் கீழ்ப்படிந்து சரீரங்களை விட்டு வெளியேறும் என முதலாவது நம்புங்கள்கர்த்தர் உங்களை ஆரோக்கியமாக்கவே, உங்கள் ஆவியிலே அவர் வாசமாயிருக்கிறார்முதலாவது பிள்ளைகள் திருப்தி அடைய வேண்டும் என்று இயேசு சொன்னார்வியாதிக்கான காரணம் என்ன என்பதை முதலாவது விசுவாசிகள் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது என நினைக்கிறன் 

வியாதிக்கான காரணம்:

1 .பாவத்தினால் வியாதி
2 .இயற்கையினால் வியாதி
3 .சாத்தானின் சோதனையே வியாதி

1. பாவத்தினால்

மாற்:2:5,11 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டதுநீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்யோவான் 5:14 அதிக கேடானது ஒன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே என்றார்.  சங்107:17 நிர்மூடர் தங்கள் பாதக மார்க்கத்தாலும்அக்கிரமங்களாலும் நோய் கொண்டு ஒடுங்கிப் போகிறார்கள்சங்103:3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம்  மன்னித்து உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, யாக் 5:14 -15  விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை சுகமாக்கும் ,அவன் பாவம் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் .இப்படி இன்னும் அநேக வேத வசனங்கள் பாவத்தினால்தான் வியாதி உண்டாகிறது என பார்க்கிறோம்.

மேலும் விபச்சாரம்வேசித்தனத்தினால்-எயிட்ஸ்
மதுபானத்தினால் - குடல் புண்களும்நுரையீரல் பாதிப்பும்
சிகரெட் புகையிலை பான்பராக் மற்றும் போதை பொருட்களினால் - கான்செர் வியாதிகளும், 
கோபம், டென்ஷனினால் - இரத்த அழுத்தமும்
பெருமையினால் - எலும்புருக்கமும்
வாசனைத்திரவியங்கள் பூசுதல் மூலம்-தோல் சர்மா வியாதிகளும் ஏற்படுகிறது.

இப்படி அநேக விஷயங்களை சொல்லலாம்விசுவாசிகள் ஒருவேளை மேற்கண்ட பாவங்களை எங்களுக்குள் இல்லை என்று பெருமிதம் கொள்ளலாம்ஆனால் இதை விட மோசமான பாவங்கள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

மற்றவர்களை மனப்பூர்வமாய் மன்னிக்காததுகுற்றம் சொல்வதுபுறங்கூறுதல்பொய்களைகளைந்து மெய்யை பேசாததுவிட்டுக் கொடுக்காத தன்மைபெருமைஎரிச்சல்பொறாமைசண்டைகள் இப்படிப்பட்ட அநேக பாவங்கள் நம்மிடம் காணப்படுமானால் இவை களினால் நமது சரீரம் பெலவீனப்படும் என்று வேதம் சொல்கிறதுஇதையே விஞ்ஞானமும் சொல்கிறதுநமது மனநிலை ஆரோக்கியமாக இருந்தால் நமது சரீரமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆகவே விசுவாசிகளே நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால்பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்அநேக விசுவாசிகள் வியாதியுள்ளவராக இருந்தாலும் பரவாயில்லை .மற்றவர்களை மன்னிகமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறார்கள்நீங்கள் எத்தனை ஊழியரிடம் ஜெபித்தாலும் சுகம் உண்டாகாதுஉங்கள் சுகம் உங்களிடமே உண்டுமன்னித்து விடுதலை பெறுங்கள்மத்:18;32:35. உங்கள் பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவுங்கள் .அப்பொழுது அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் என்று எழுதப்பட்டுள்ளது(1 பேதுரு 2:24 ).

2. இயற்கையினால்

சங்கீ:121:6 பகலிலே வெயிலாகிலும்இரவிலே நிலவாகிலும் உன்னை சேதப்படுத்துவதில்லையாத்23:25 அவர் உன் அப்பத்தையும்தண்ணீரையும் ஆசிர்வதிப்பார்வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்உபாக28:14,22-35 கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடாததினால், இயற்கைகள் இஸ்ரவேலருக்கு விரோதமாக வியாதிகளை ஏற்படுத்தினது. இன்றும் இயற்கையின் சீற்றத்தினால் பலவிதமான வியாதிகள் பரவுவதை நாம் பார்க்கிறோம்பிளேக் நோய்பன்றிக்காய்ச்சல்சிக்கன்குனியாமலேரியாடெங்குகாய்ச்சல்  இப்படி இனம் புரியாத பெயர் தெரியாத வியாதிகள் நிறைந்த உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்இவைகளுக்கு காரணம் என்னதேசங்களிலே சுகாதாரம் இல்லைஇயற்கையிலே பாதிப்புகள் ஏற்படுகிறதுமாசுபடிந்த காற்றை நாம் சுவாசிக்கிறோம்விஷம் நிறைந்த உணவை நாம் புசிக்கின்றோம்வீட்டிலும் வெளியிடத்திலும் சுகாதாரமில்லாத சூழ்நிலைகளை நாம் உணருகிறோம்தானியங்களும்தாவரங்களும்பழ வகைகள் அனைத்திலும் உரம் என்ற பெயரில் விஷம் தெளிக்கப்படுகிறதுஇவைகளை புசிப்பதினால் ஆரோக்கியம் கெட்டு சரீரம் பாதிக்கப்படுகிறதுஆகவே நம்மை சுற்றிலும் இருக்கும் இயற்கை நமக்கு ஆசிர்வாதமாக இராதபடிக்கு மனிதன் அவைகளை கெடுத்துப் போடுகிறான்ஆகவே இயற்கை நமக்கு பேராபத்தை தருகிறதுஎனினும் தேவன் இயற்கையினால் ஏற்படும் வியாதிகளை சுகமாக்க அவைகளின் மேல் அதிகாரம் உள்ள தமது வல்லமையான வார்த்தைகளை தேவன் நமக்கு தந்திருக்கிறார்.
தேவன் தமது வசனத்தை அனுப்பி நோயுண்டவர்களை குணமாக்குகிறார்சங்107:20 கர்த்தரையே சேவியுங்கள் அவர் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசிர்வதிப்பார் யாத்23:25 தேவனுடைய வார்த்தைக்கு நாம் செவி கொடுத்து அவர் வசனத்தை நாம் கைக்கொண்டால், அவரே நமது பரிகாரியாகிய கர்த்தர்யாத்:15:26 இயற்கையின் விளைவுகளை நாம் தேவனுடைய வார்த்தையினால் மேற்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

3.சாத்தானின் சோதனையினால்

தேவன் பொல்லாங்கினால் சோதிக்கிறவர் அல்ல ஆனால் பொல்லாங்கன் சோதிக்கிறான்தேவனுடைய மனுஷனாகிய யோபுவை சாத்தான் சோதிப்பதற்கு தேவனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டான்அந்தப்படியே அவன் புறப்பட்டுப் போய் யோபுவின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்யோபு 2:7. சங்கீதக்காரன் சாத்தானின் செயல்களை இவ்விதமாகக் கூறுகிறான்.                 

இரவில் உண்டாகும் பயங்கரம்!
பகலில் பறக்கும் அம்பு!
இருளில் நடமாடும் கொள்ளை நோய்!
மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரம்!
இவைகள் சாத்தானால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்இதிலே அவன் ஒரு கொள்ளை நோயாகவும் இருக்கிறான்நம்முடைய சரீரத்தை நோயினால் பாதிப்புகுட்படுத்த அவனால் கூடும்புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லும் போது, என் மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது அது என்னை குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது என்றார்.
தேவன் இந்த பெலவீனத்திலிருந்து பவுலை விடுதலை செய்யாமல் என் கிருபை உனக்குப் போதும் என்று சொல்லி அவனுடைய பெலவீனத்தில் அவனை பெலமுள்ளவனாய் நடத்தினார்சாத்தானுடைய சோதனையினால் ஏற்படும் சரீர பெலவீனங்கள் ஒரு போதும் நம்முடைய ஊழியத்தை பாதிக்காதுஅநேக தேவ மனிதர்கள், சரீர பெலவீனமுள்ளவர்களாய் இருந்தும், ஆவியின் பெலத்தினால் வல்லமையான ஊழியங்களை செய்தார்கள்தற்போதும் செய்து கொண்டு வருகிறார்கள்இந்த சோதனையின் வியாதி நம்மை பரிசோதிப்பதற்கும்நாம் தேவனோடு நெருங்கவும்அவர் கிருபையை ருசிக்கவும்எதுவாக இருக்குமே அல்லாமல் பின்மாற்றத்திற்கு ஏதுவானதாக இருக்காதுஎனினும் இந்த வியாதி சில காலம் இருந்து பின்பு காணாமல் போகும்.ஆகவே பொறுமையோடே சகித்தால் ஜெயம் பெறுவீர்கள்.

அருமையான விசுவாசப் பிள்ளைகளேபாவத்தினால் ஏற்பட்ட நோய்களை இயேசு கிறிஸ்துவின் தழும்புகளாலும், இயற்கையினால் ஏற்பட்ட நோய்களை தேவனுடைய வசனத்தினாலும்சாத்தானுடைய சோதனை யினால் ஏற்படும் நோய்களை பொறுமையோடே சகிப்பதாலும் வெற்றி பெறலாம்இப்படி சுகமாக்கப்பட்ட தேவ பிள்ளைகள் மற்றவர்களையும் சுகமாக்கவே, தேவன் நம்மை உலகத்தில் வைத்திருக்கிறார்.

சுகம் பெறுங்கள் ! சுகம் கொடுங்கள்.!!
சமாதானத்தின் தேவன் நம்மொடிருப்பாராக,
ஆமென் .



No comments:

Post a Comment