அன்றைய ஊழியர்களுக்கு இருந்தது வல்லமையும் வரமும்
இன்றைய ஊழியர்களுக்கு இருப்பது வெள்ளியும் பொன்னும்
அன்றைய ஊழியர்களுக்கு பணத்தை சுமப்பது பாரம்.
இன்றைய ஊழியர்களுக்கு பணத்தை சுமப்பது வரம்.
அன்றைய ஊழியர்கள் கட்டினது சபையை
இன்றைய ஊழியர்கள் கட்டுவது வீட்டை
அன்றைய ஊழியர்கள் செய்தது தியாக சேவை
இன்றைய ஊழியர்கள் செய்வது குடும்ப சேவை
அன்றைய ஊழியர்கள் சிந்தியது செந்நீரும் கண்ணீரும்
இன்றைய ஊழியர்கள் தெளிப்பது சென்ட்டும் ,பன்னீரும்
அன்றைய ஊழியர்கள் ஊழியம் ஜெபமும் பிரசங்கமும்
இன்றைய ஊழியர்கள் ஊழியம் சீடி மற்றும் புத்தக வியாபாரமும்
அன்றைய ஊழியர்க்களின் தகுதி விசுவாசமும் ,பரிசுத்தமும்
இன்றைய ஊழியர்களின் தகுதி காவியும்,கால்ல உபதேசமும்
அன்றைய ஊழியர்கள் தெரிந்து கொண்டது உபத்திரவமும் ,துன்பமும்
இன்றைய ஊழியர்கள் தெரிந்து கொண்டது காரும்,பங்களாவும்.
அன்றைய ஊழியர்க்களின் முடிவு இரத்தசாட்சியாக
இன்றைய ஊழியர்களின் முடிவு பரிதாபமாக
அன்றைய ஊழியர்கள் விழுந்தவனை தூக்கி விட்டார்கள்
இன்றைய ஊழியர்கள் நிற்பவனை தள்ளி விடுகிறார்கள் .
அன்றைய ஊழியர்கள் கொடுத்தது சரீரமும் ஜீவனும்
இன்றைய ஊழியர்கள் கொடுப்பது தங்களையும் ,மற்றவர்களையும்
அன்றைய ஊழியர்களின் நற்சாட்சியை நாம் பேசுகிறோம்
இன்றைய ஊழியர்களின் துர்ச்சாட்சியை உலகம் பேசுகிறது .
No comments:
Post a Comment