Pages

Wednesday, 26 December 2012

Deliever those who are Bound கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்.



மத்தேயு:16 :19
பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.

பழைய ஏற்பாட்டு நாட்களில் தேவன் ஏதேன் தோட்டத்தை கேருபீங்களினால் (சுடரொளி பட்டயம்அடைத்தார்அதை ஒருவரும் திறக்க முடியவில்லைநோவா முதலான எட்டுப் பேரையும்சகல மிருக ஜீவன்களையும் பேழையின் உள்ளே விட்டு கர்த்தர் கதவை அடைத்தார்அதை ஒருவரும் திறக்க முடியவில்லைபின்பு தேவனாகிய கர்த்தரே அதைத் திறந்தும் விட்டார்தேவன் அடைத்ததை திறக்கிறவன் யார்தேவன் திறந்ததை அடிக்கிறவன் யார்இன்னும் நமக்கு சாட்சியாக எருசலேமின் கிழக்குச் சுவரும் அதன் வாசல்களும் பூட்டப்பட்டும் இருக்கிறதுஇதை திறக்க வல்லவன்  யார்கர்த்தர்ரகிய இயேசு கிறிஸ்து தமது இரண்டாம் வருகையின்போது ஒலிவ மலையில் இறங்கி எருசலேமுக்கு நேரே பவனி வரும் போது அந்த கிழக்கு வாசல் தானாய் திரவுண்டு போம்(சகரியா:14:4 , எசேக்கி:44:1 ,2 )

புதிய ஏற்பாட்டின் காலத்தில் பரோலகத்தில் திறவுகோல்களை கிறிஸ்துவானவர் நமக்கு (சபைக்குதந்திருக்கிறார்நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும்ஒருவரும் திறக்க முடிய முடியாதபடி பூட்டுகிறவரும் ஆவார்வெளி3:7 அவர் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராவார்அவர் தமது சபைக்கு சில திறவுகோல்களை வாக்குப்பண்ணியிருக்கிறார்அவைகளை நீங்கள் பெற்றிருகிறீர்கள்முதலாவது இந்த திறவு கோல்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி தேவனுடைய ஆசிர்வாதங்களை அனுபவியுங்கள்பின்பு மற்றவர்களுக்கு இதை பயனுள்ளதாக மாற்றுங்கள்.

1. பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்


இன்றைய ஆவிக்குரியவர்கள் தங்களை உயிருள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும்அநேக கட்டுகளுக்கு தங்களை உட்படுத்தி அறியாமையினாலே அவர்கள் கட்டப்பட்டவர்க ளாய் காணப்படுகிறார்கள்யோவான்11:44  இவ்வசனத்தில் மரித்த லாசரு கிறிஸ்துவின் ஜெபத்தினால் உயிர்ப்பிக்கப்பட்டான்ஆனால் அவன் கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள் என்று இயேசு சொன்னார்உயிர்த்தெழுந்தவன் விடுவிக்கப்படுவது அதிக அவசியமாய் இருக்கிறதுஇந்த விடுதலையை அருகில் நின்றவர்கள் செய்யும்படியாய் கட்டளை கொடுத்தார்லாசரு கல்லறையை விட்டு வெளியே வந்ததது உண்மைதான்ஆனால் அவனால் நடக்க முடியாதுபார்க்க முடியாதுபேச முடியாதுகேட்க முடியாதுகைகளை அசைக்க முடியாதுஆனால் இவன் உயிருள்ளவன் தான்ஆனால் உயிருள்ள எந்த கிரியையையும் செய்ய முடியாமல் கட்டப்பட்டவன்பாவமாகிய கல்லறையை விட்டு வெளியே வந்த விசுவாசிகள் உயிருள்ளவர்கள் தான் ஆனால் எந்த வித கிரியைகளும் செய்யாமல் கட்டப்பட்டிருந்தால் பயன் என்னபடுக்கைகளில் உள்ள நோயாளிகளுக்கு உயிர் இருக்கிறதுஆனால் எந்த வேலைகளையும் செய்ய இயலாதவர்கள்இப்படியே இன்றைய சபையின் மக்கள்.

அன்பானவர்களேஉங்கள் கட்டுக்களை எறிந்து போடுங்கள்இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் முதலாவது விடுதலையாகுங்கள்சமுதாயக்கட்டுகுடும்பக்கட்டுபாரம்பரியக்கட்டுஉலகக்கட்டு அனைத்தையும் அறுத்து விடுங்கள்அப்பொழுது ஆசிர்வதிக்கப்படுவீர்கள்.

லூக்:1:64  உடனே அவனுடைய வாய்திறக்கப்பட்டு அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டுதேவனை ஸ்தோத்தரித்து பேசினான். அவிசுவாசத்தின் கட்டுகளிலே சிக்குண்ட சகரியா பத்து மாதமளவும் வாய் திறவாத ஊமையாய் இருந்தான்இவன் பெயர் யோவான் என்று எழுதி தன் விசுவாசத்தை அறிக்கை செய்த மாத்திரத்திலே அவன் கட்டுகள் அவிழ்கப்பட்டுள்ளதுஆம் விசுவாசிகளேதேவனுக்காக பேச முடியவில்லை என்று சொல்லுகிற உங்கள் வாயும்நாவும் தேவனை ஸ்தோத்தரித்து புகழுமானால் நிச்சயம் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள்மாற்கு:7:35  உடனே அவன் செவிகள் திறக்கப்பட்டு,அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து அவன் செவ்வையாய் பேசினான்.

லூக்க13:14 இதோ சாத்தான் பதினெட்டு வருஷமாய் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்து விடவேண்டியதில்லையாஎன்றார்.  
சாத்தான் மனிதர்களை கட்டிப் போடுகிறவனாய் இருக்கிறான்கிறிஸ்துவின் ஊழியத்தில் அநேகருடைய அசுத்த ஆவியை துரத்தி அவர்களின்  கட்டுக்களை அவிழ்த்தார்அப்பொழுது அவர்கள் தேவனை மகிமைப் படுத்தினார்கள்இன்று நாமும் கூட அப்படிச் செய்ய தேவனிடம் கிருபை பெற்றிருக்கிறோம் என்று உணர்ந்து பிசாசுகளின் கட்டுக்களை அவிழ்த்து விடுங்கள்நீங்களும் சாத்தானால் கட்டப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்

மாற்கு:11:1-10  இந்த வேத பகுதியல் கட்டப்பட்ட கழுதையை அவிழ்க்கும் படி இயேசு சீஷர்களுக்கு கட்டளையிட்டார்யாராவது உங்களிடம் ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டால் "இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்என்றார்

அநேகர் கிறிஸ்துவின் பக்கம் வரவேண்டுமானால் சீஷர்கள் மனிதர்களின் கட்டுக்களை அவிழ்ப்பது எத்தனை அவசியம்இந்த பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்அவர்கள் அனைவரையும் கிறிஸ்துவிடம் கொண்டு வருவது அபோஸ்தலர்களுடைய கடமை அல்லவாஇன்றைக்கும் நாம் அநேகருடைய கட்டுக்களை அவிழ்க்கும் போது அது பரலோகத்திலும் அவிழ்க்கப்பட்டிருக்கும்இந்த அதிகாரத்தை தேவன் சபைக்கு கொடுத்திருக்கிறார்அக்கிரமத்தின் கட்டுக்களை அவிழ்த்ததுவிட வேண்டும்நீதி 5:22  ஏசா 58:6,  ஆகிய வசனங்களை கவனியுங்கள்ஆயுதம் தரித்த பலவானாகிய சாத்தான்  தன் அரண்மனையை காக்கிறபோது அவனுடைய பொருள்களாகிய ஆத்துமாக்கள் பத்திரப்பட்டிருக்கும்ஆனால் அவனிலும் பலவானாகிய பரிசுத்த ஆவியானவர் வந்து அவனை (சாத்தானைமேற்கொள்வாரேயாகில்அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் (சகல பிசாசின் கிரியைகளையும் உரிந்து கொண்டுபறித்துக் கொண்டு அவனுடைய கொல்லைப் பொருளை (ஆத்துமாக்களை ) பங்கிடுவான் என்றார்.

இப்படிபட்ட கிரியைகளை செய்யவே தேவன் தமது சபைக்கு திறவுகோல் என்னும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்பரலோகத்தின் திறவுகோல் களை  உங்களுக்கும்மற்றவர்களுக்கும் பயன்படும் படியாக உபயோகப்படுத்துங்கள்கர்த்தரால் ஆசிர்வாதம் பெறுவீர்கள்.

No comments:

Post a Comment