Pages

Tuesday, 22 January 2013

Evangelism Then & Now சுவிசேஷ ஊழியம் அன்றும் இன்றும்


அன்று:சபைக்குள்ளிருந்து சுவிசேஷ ஊழியம் செய்தார்கள். (அப்:8 :1,4 ,5) 

இன்று: எந்த சபையிலும் அங்கம் வகிக்காமல், தன்னிச்சையாய் சுவிசேஷ ஊழியம் செய்கிறார்கள். 

அன்று: அப்போஸ்தலர்களுக்கு கீழே பணிபுரிந்தார்கள். (அப்:8 :14) 

இன்று: அப்போஸ்தலரும் நான் தானே! சுவிசேஷகரும் நான் தானே! மேய்ப்பனும் நான் தானே! போதகனும் நான் தானே! என்று சொல்லிக்கொள்கிறார்கள். 

அன்று: தேவ ஆவியினாலே அனுப்பப்பட்டு பிரசங்கித்தார்கள்.(அப்:8 :26 :29) 

இன்று: தங்கள் ஞானத்தினால் மனுஷர்களை வசப்படுத்தி, அவர்கள் மூலம் உலகத்தி சுற்றி வருகிறார்கள். 

அன்று: வேத வாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து பிரசங்கித்தார்கள். (அப்:8 :35) 

இன்று: தங்களை முன்னிட்டு, தங்கள் பிள்ளைகளையும், ஊழியங்களையும், தங்கள் தேவைகளையும் பிரசங்கிக்கிறார்கள். 

அன்று: ஜனங்கள் மனந்திரும்புதலுக்கும், ஞானஸ்நானத்திற்கும் ஒப்புக்கொடுக்கச் செய்தார்கள்.(அப்:8 :12) 

இன்று: ஜனங்கள் (அப்பாவிகளை ) தங்கள் வசதிக்கேற்ப ஆட்டி வைக்கும் மாயாஜாலக்காரராகிறார்கள். 

அன்று: பணத்தை சுமப்பது பாரம் என்று கைகளை உதறினார்கள். (அப்:8 :20) 

இன்று: பணத்தை சுமப்பது வரம் என்று கைகளை நீட்டுகிறார்கள். 

அன்று: கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பூரணமாய் புறஜாதிகளுக்கு பிரசங்கித்தார்கள். (ரோமர்15:19) 

இன்று: சுவிசேஷத்தை தவிர முகாம்கள், வேத ஆராய்ச்சி கூட்டங்கள், தீர்க்கதரிசன பயிற்சி, மேய்ப்பர்களுக்கு பயிற்சி என்று கிறிஸ்தவர்களுக்கு பிரசங்கிக்கிறார்கள். 

அன்று: தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாக பிரசங்கித்தார்கள். (2கொரி11:7) 

இன்று: சுவிசேஷ கூட்டங்களுக்கு முற்பணம் (அட்வான்ஸ்) வாங்கிக் கொண்டு ஊழியத்திற்கு பேதம் பேசுகிறார்கள். 

அன்று: சுவிசேஷகர்கள் சென்ற இடமெல்லாம் சபைகளைக் கட்டினார்கள். (அப் 8:12 ,17;16:13 ;15 :40) 

இன்று: கோபுரங்களையும், குளங்களையும், தோட்டங்களையும், தேவனுக்கு வீட்டையும், விருந்தினர் மாளிகைகளையும் கட்டுகிறார்கள். 

அன்று: சுவிசேஷத்தினால் பிழைப்பு உண்டானது. (1கொரி:9 :14) 

இன்று: பிழைப்பிற்காகவே சுவிசேஷ ஊழியம் உண்டானது. 

அன்று:சுவிசேஷத்தை எண்ணிக்கை உள்ளவர்களுக்கே தனிமையாய் விபரித்துக் காண்பித்தார்கள். (கலா2:2) 

இன்று: ஆயிரம், பதினாயிரம், என்று கூட்டத்தைக் கூடி கிறிஸ்தவர்களுக்கே சுவிசேஷம் அறிவிக்கிறார்கள். 

அன்று:கிறிஸ்துவின் சுவிசேஷத்தை செலவில்லாமல் ஸ்தாபித்தார்கள். (1கொரி:9:18) 

இன்று: சுவிசேஷகருடைய சுய விளம்பரத்திற்காக பல லட்சம் ரூபாய்களை விரயமாக்குகிறார்கள். 

அன்று: கிறிஸ்துவின் நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவித்தார்கள். (ரோமர்:15 :21) 

இன்று: கிறிஸ்துவின் நாமத்தை அறிந்து ஆராதனை செய்கிற சபைக்குள் சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறார்கள். 

அன்று:சுவிசேஷத்தை வசனத்தோடும், வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் பிரசங்கித்தார்கள்.(1தெச:1 :5) 

இன்று: சுவிசேஷத்தை கதைகளோடும், ஜோக்குகளோடும், அனுபவ சாட்சிகளோடும், நயவஞ்சிப்போடும் பிரசங்கிகிறார்கள் 

அன்று: சுவிசேஷத்தின் நிமித்தம் பாதகன் போல கட்டப்பட்டு துன்பத்தை அனுபவித்தார்கள். (எபே:6 :19, தீமோ:2 :9). 

இன்று: சுவிசேஷத்தின் நிமித்தம் பணங்களை சம்பாதித்து நிலங்களையும் , வீடுகளையும் வாங்கி சுகபோகத்தை அனுபவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment