Pages

Tuesday, 29 January 2013

DOWNLOAD FREE TAMIL LIVE WORSHIP PODCAST

எமது ஞாயிறு ஆராதனைகளில், பாஸ்டர் றொஷான் மகேசன் துதியில் வழிநடத்தும் பாடல்களையும், ஜெபங்களையும், மற்றவர்களும் அதனூடாக ஆசீர்வாதமடைய, PODCAST மூலமாக வெளியிட்டு வருகிறோம். இப் பாடல்கள் யாவும், சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனுக்கே கணத்தையும், மகிமையையும், துதிகளையும் கொண்டுவருவதாக. இதை கேட்கும் ஒவ்வொருவரும், தேவனுடைய பிரசன்னத்தை தங்கள் இருதயங்களிலும், சரீரங்களிலும் உணர்ந்து கொள்வார்களாக. வியாதியின் படுக்கையிலிருப்பவர்கள், தேவ வல்லமையால் தொடப்பட்டு குணப்படுவார்களாக. அதைரியமடைந் திருப்பவர்கள், புதுப்பெலனடைவார்களாக. கர்த்தரை விட்டு தூரமாய்ப் போனவர்கள், அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரிடத்திற்கு ஓடி வருவார்களாக. ஆமென்.

No comments:

Post a Comment