ஆ.. கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும், பூமியையும் உண்டாக்கினீ்ர். உம்மாலே செய்க்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. (எரேமியா 32:17).
1908ம் ஆண்டு, திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்த மதமே பிரதானமாக இருந்ததால், அம் மதம் நசிந்து போய்விடக் கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமயான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிஷேசத்திற்கு வரவேற்பு இருக்வில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து, அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்றி ஊறுக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்தை பிரசங்கித்த குற்றத்திற்காகவும், லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.