Pages

Wednesday 10 April 2013

Deborah தெபோராள் A woman of Courage

நியா 4 & 5 அதிகாரங்களிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், சிலருடைய ஆவிக்குரிய ஜீவியமானது ஒரு மனிதனிலே தங்கியிருந்து பின்பு அந்த மனிதன் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நீக்கப்படும் பொழுது, அவர்கள் எப்படி தங்கள் தேவனிடம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்களை மறந்து வாழ்க்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்டவர்களை தேவன் மீண்டும் எப்படி தன்னிடத்திற்குத் திருப்புகிறார் என்பதையும் விளக்குகிறார். மட்டுமல்ல, தேவன் தன்னோடு பேசின வார்த்தையை எப்படி தெபோராள் எனும் தீர்க்கதரிசி விசுவாசித்து, அதன்படி செய்தபடியால், கர்த்தர் அவள் மூலமாக இஸ்ரவேலரை 80 வருட அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கினார் என்பதையும் விளக்குகிறார். இச் செய்தியை முழுமையாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள். ஆமென்.

Wednesday 3 April 2013

மீண்டும் நிலைநிறுத்தும் கிறிஸ்துவின் அன்பு


நான் அடைந்தும், உங்களுக்கு பிரதானமாக ஒப்பு வித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங் களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசன மானார் (1கொரிந்தியர்15:3-5). 



”அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார் (மத்தேயு26:31). என்று இயேசு கிறிஸ்து கூறினபோது, பேதுருவுக்கு அதைக் குறித்து மிகவும் துக்கமாயிருந்தது. அவர் என்னுடைய போதகருக்கு இந்த காரியங்கள் நடக்கக்கூடாதே என்று சிந்திக்க ஆரம்பித்தார். அவரோடு கடந்த மூன்றறை வருடங்களாக கூடவே இருந்து, அவர் போதித்த காரியங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் கண்டிருந்த பேதுருவுக்கு, இந்த காரியங்கள் நடக்க எந்த சாத்தியமும் இல்லை என்ற ஆணித்தரமான விசுவாசம் இருந்தது.