Pages

Thursday 29 August 2013

POTTER குயவனின் வீட்டிலிருந்து சில பாடங்கள்

தேவன் தம்முடைய ஜனங்களோடு வைத்திருக்கும் உறவை சிலவற்றிற்கு ஒப்பிட்டுள்ளார். அவையாவன 1. ஒரு மேய்ப்பனும் மந்தையும் - பாதுகாத்து நடத்துகிறவர் 2.ஒரு கணவன் மனைவி - நிபந்தனையற்ற அன்பபைச் செலுத்துகிறவர், 3.தகப்பன் பிள்ளை - கரிசனையோடு நடத்தும் தகப்பன் ஆகும். எரேமியா 18:1-6 வரையுள்ள பகுதியிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன், கர்த்தர் தம்மை ஒரு குயவனுக்கும், தம்முடைய ஜனத்தை களிமண்னுக்கும் ஒப்பிட்டுள்ளதைக் காண்பித்து, குயவனுடைய விட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்க்கூடிய சில ஆவிக்குரிய சத்தியங்களை எடுத்துரைக்கிறார்.

Tuesday 27 August 2013

Ministry at Winners Youth Camp August 2013

The 30th annual Winners youth camp "PNEUMA" was held in Pathana, TALAWAKELA on the 20th - 22nd August 2013.  325 youths from various parts of Sri Lanka attended and were blessed. The Lord had given Rev.Jacob Ratnam, Senior Pastor at Lighthouse Church, Gampola, Sri Lanka a vision to reach the youth and to make them Leaders. I attended this youth camp 28 years ago, and that camp was one of the instrument God used to confirm my calling for full time ministry. I had the wonderful privilege of sharing & ministering at this camp. Please pray that these children would be greatly used by the Lord in the coming days.

I was Preaching about the importance of being filled in the Holy Spirit to be effective witnesses to Jesus Christ.

 Responding to the call to be filled by the Holy Spirit


 

 Experiencing the Anointing Of God 

 TOUCHED BY THE POWER OF GOD


Thursday 1 August 2013

உயர்ந்த அனுபவம்


'அவர்கள் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்'. - (மத்தேயு 17:14-15).
 
இயேசு கிறிஸ்துவும் அவருடன் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூன்று சீஷர்களும் மறுரூப மலையிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்திருந்தார்கள். அந்த அனுபவம் இன்னும் அவர்கள் இருதயத்திலிருந்து அகலாதிருந்தது. மோசேயும், எலியாவும் அங்கு இயேசுவுடன் பேசி கொண்டிருந்ததை நேரில் அந்த சீஷர்கள் கண்டிருந்தனர். இயேசுவின் முகம் சூரியனை போல பிரகாசித்திருப்பதை நேரில் கண்டிருந்தனர். 'ஆஹா! என்ன ஒரு உன்னத அனுபவம் அது! அதிலேயே அப்படியே இருந்து விட்டால் எத்தனை நலமாயிருக்கும்' என்று யோசித்தபடியே, அவர்கள் அந்த நினைப்புடனே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர்.