நான் அடைந்தும், உங்களுக்கு பிரதானமாக ஒப்பு வித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங் களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசன மானார் (1கொரிந்தியர்15:3-5).
”அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லோரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். ஆகிலும் நான் உயர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார் (மத்தேயு26:31). என்று இயேசு கிறிஸ்து கூறினபோது, பேதுருவுக்கு அதைக் குறித்து மிகவும் துக்கமாயிருந்தது. அவர் என்னுடைய போதகருக்கு இந்த காரியங்கள் நடக்கக்கூடாதே என்று சிந்திக்க ஆரம்பித்தார். அவரோடு கடந்த மூன்றறை வருடங்களாக கூடவே இருந்து, அவர் போதித்த காரியங்களையும், அவர் செய்த அற்புதங்களையும் கண்டிருந்த பேதுருவுக்கு, இந்த காரியங்கள் நடக்க எந்த சாத்தியமும் இல்லை என்ற ஆணித்தரமான விசுவாசம் இருந்தது.