Pages

Showing posts with label Zionbatti. Show all posts
Showing posts with label Zionbatti. Show all posts

Thursday, 29 August 2013

POTTER குயவனின் வீட்டிலிருந்து சில பாடங்கள்

தேவன் தம்முடைய ஜனங்களோடு வைத்திருக்கும் உறவை சிலவற்றிற்கு ஒப்பிட்டுள்ளார். அவையாவன 1. ஒரு மேய்ப்பனும் மந்தையும் - பாதுகாத்து நடத்துகிறவர் 2.ஒரு கணவன் மனைவி - நிபந்தனையற்ற அன்பபைச் செலுத்துகிறவர், 3.தகப்பன் பிள்ளை - கரிசனையோடு நடத்தும் தகப்பன் ஆகும். எரேமியா 18:1-6 வரையுள்ள பகுதியிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன், கர்த்தர் தம்மை ஒரு குயவனுக்கும், தம்முடைய ஜனத்தை களிமண்னுக்கும் ஒப்பிட்டுள்ளதைக் காண்பித்து, குயவனுடைய விட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்க்கூடிய சில ஆவிக்குரிய சத்தியங்களை எடுத்துரைக்கிறார்.

Wednesday, 10 April 2013

Deborah தெபோராள் A woman of Courage

நியா 4 & 5 அதிகாரங்களிலிருந்து பாஸ்டர் றொஷான் மகேசன் அவர்கள், சிலருடைய ஆவிக்குரிய ஜீவியமானது ஒரு மனிதனிலே தங்கியிருந்து பின்பு அந்த மனிதன் தங்களுடைய வாழ்க்கையிலிருந்து நீக்கப்படும் பொழுது, அவர்கள் எப்படி தங்கள் தேவனிடம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்களை மறந்து வாழ்க்கிறார்கள் என்பதையும், அப்படிப்பட்டவர்களை தேவன் மீண்டும் எப்படி தன்னிடத்திற்குத் திருப்புகிறார் என்பதையும் விளக்குகிறார். மட்டுமல்ல, தேவன் தன்னோடு பேசின வார்த்தையை எப்படி தெபோராள் எனும் தீர்க்கதரிசி விசுவாசித்து, அதன்படி செய்தபடியால், கர்த்தர் அவள் மூலமாக இஸ்ரவேலரை 80 வருட அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கினார் என்பதையும் விளக்குகிறார். இச் செய்தியை முழுமையாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்துவையுங்கள். ஆமென்.