Pages

Sunday 12 January 2014

நல்ல வார்த்தைகளையே பேசுவோம்

உன் பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். - (எபேசியர் 4:29).
.
கர்த்தருடைய ஊழியர் ஒருவர் பிரசித்தி பெற்ற டாக்டர் ஒருவரோடு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர் நரம்பு சம்பந்தமான சிகிச்சையில் மிகவும் பெயர் பெற்றவர். அவர் தேவ மனிதனிடம் சொன்னார், 'சரீரத்திலுள்ள எல்லா நரம்புகளைக் காட்டிலும் பேச்சுக்கான நரம்புகளே நம் சரீரத்தை ஆளுகிறவைகளாக இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? தேவ ஊழியர்களாகிய நீங்கள் வேத வசனத்தை இடைவிடாமல் பேசுகிறதாலேயே வல்லமையுள்ளவர்களாக இருப்பதற்கு இதுவே காரணம்' என்றார்.

Wednesday 8 January 2014

பிரிந்த யோர்தான் நதி

பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் குவியலாக நிற்கும் என்றான். - (யோசுவா 3:13).
.
இஸ்ரவேலர் தங்களுடைய அவிசுவாசத்தினால் 40 வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றி அலைந்து, கடைசியில் கானானை சுதந்தரிக்க போகும் நேரத்தில் அவர்களுக்கு முன்பாக தடையாக நின்றது யோர்தான் நதி. கில்காலிலிருந்து அதை கடப்பது மிகவும் எளியது ஏனெனில் அது 100 அடி அகலமானது மட்டுமே. ஆனால் மனிதன் தன்னை குறித்து மேன்மை பாராட்ட கூடாதபடி, தேவன் அறுப்புக்காலத்தில் அதை கடக்கும்படி செய்கிறார். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம் என்று வேதம் கூறுகிறது. கரைபுரண்டு போகும் யோர்தானை கரை கடப்பது மிகவும் ஆபத்தானது. எப்போதும் இருப்பதை விட 50 மடங்கு அதிக ஆழமாக இருக்கும் அந்த நேரத்தில் அவர்கள் அதை கடப்பது என்பது நினைத்து பார்க்க முடியாத ஒரு காரியமாகும். அவர்களுக்கு அந்த வேளையில் தேவனுடைய உதவி அவசியமானதாக, அத்தியாவசியமானதாக இருந்தது.

Sunday 5 January 2014

Follow

கர்த்தருக்குப் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். ”என் பின்னே வாருங்கள்” எனும் கர்த்தருடைய இதயத்துடிப்போடு, இப் புதிய 2014 ஆண்டிற்குள் கடந்து செல்வோமாக.
 யோவான் 1:29-34ல், யோவான்ஸ்நானன் இயேசு கிறிஸ்து, தேவனுடைய குமாரன் என்றும், அவர் உலகத்தின் பாவங்களை தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டியானவர் என்றும், அவரே இதுவரை உலகம் காத்திருந்த மேசியா என்றும் முழுமனதுடனே விசுவாசித்தார். நாமும் யோவானைப்போல் இயேசுவை அறிந்திருந்தால், அவரை பின்பற்றுவோம் அல்லவா?
 யோவான் 1:35-36ல் இயேசு இரண்டாவது தடவையாக யோவான்ஸநானன் இருந்த இடத்திற்கு வருகிறார். அப்பொழுது யோவான்ஸ்நானன் தன்னை பின்பற்றி வந்த சீஷர்களைப் பார்த்து, இயேசு கிறிஸ்து யார் என்று உங்களுக்கு தெளிவுபடுத்தியும், ஏன் இன்னும் அவரைப் பின்பற்றாமல் இருக்கின்றீர்கள் என்று கேட்கிறான். அப்பொழுது தான் யோவானும், அந்திரேயாவும் இயேசுவின் பின்னே போகின்றார்கள். இயேசு இவ்விருபேரும் தம்மை பின்தொடர்வதைக் கண்டு, என்ன தேடுகின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள், ”நீர் தங்குமிடத்தை பார்க்கும்படி வருகின்றோம் ” என்றார்கள். அவ்விரு சீஷர்களும் அன்று அவருடனேயே தங்கியிருந்தனர்.

Friday 3 January 2014

Why Do the Righteous Suffer?

"I have heard of You by the hearing of the ear, but now my eye sees You.”  JOB 42:5
The testing of Job was a valid test, a crucial one, and a crucible through which each Christian will be purged, sifted, and tried. To what end? It is summed up in the words of Job himself as he neared the end of his ordeal: “I have heard of You by the hearing of the ear: but now my eye sees You.” BUT NOW! BUT NOW! BUT NOW! Before he heard about Him, but now he sees Him, and falls to the ground. Before he worshiped Him having heard, now he worships having seen, and known.
I believe that God set him up for such experiential knowledge by allowing him to be subjected to the assaults of the devil, the harshness of his environment, the misunderstanding of his friends, the loss of his family and material possessions, and his physical infirmity. I submit that if anyone desires to take up the Cross and follow Christ, such testing is the only realistic expectation His disciple can entertain.

Thursday 2 January 2014


உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். – (சங்கீதம் 91:1).

நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய நிழல் என்று ஒன்று இருக்கிறது. நாம் நடக்கும்போது நம்முடைய நிழல் நம்மை தொடர்ந்து வருகிறது. பகல் 12 மணிக்கு மாத்திரம் நிழல் தனியாக தெரிவதில்லை. மற்ற நேரங்களில் நிழல் நம்மை தொடர்ந்து வருகிறதை நாம் பார்த்திருக்கிறோம்.
நான் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்லும்போது பகலின் வெயிலுக்கு ஒரு அடைக்கலமாக நிழல் எங்காவது கிடைக்குமா என்றுப் பார்த்து ஒதுங்குவது வழக்கம். பெய்யும் மழைக்கு தப்பும்படியாக நிழலை தேடி ஒதுங்குகிறவர்கள் உண்டு. பஸ் வந்து நிற்கும் இடத்திற்கு பயணிகள் நிழற்குடை என்று எழுதியிருப்பார்கள். இப்படி நிழலை தருவதற்கென்று அசோக இராஜா பல நிழல்தரும் மரங்களை நட்டார் என்று சரித்திரத்தில் நாம் வாசித்திருக்கிறோம். அதுப்போல நம்மை காப்பதற்கும் ஒரு நிழல் உண்டு. அது வேறு யாருமல்ல, நம்முடைய சர்வவல்ல தேவனுடைய நிழலே.